நாகை: நாகையில் பனங்குடி சிபிசிஎல் அலுவலகத்தின் கதவை மூடி ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே வழங்கிய ஊதியத்தை விட தற்போது குறைவாக ஊதியம் தரப்படுவதாக கூறி தொழிலாளர்கள் போராடிவருகின்றனர். அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டுள்ளதால் அதிகாரிகளின் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்திவைக்கபட்டுள்ளது.