கொரோனா பரவல் தடுப்பு தொடர்பில் கடும்போக்கு நடவடிக்கை மேற்கொண்டதில் தவறு நடந்துள்ளதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான நடவடிக்கைகள்
புத்தாண்டுக்கு முந்தைய நாள் ஆற்றிய உரையில், கடுமையான நடவடிக்கைகள் என்பது பொதுவான விதிகளுடன் செயல்படுத்தப்பட்டது தான் என்றார்.
ஆனால், மக்கள் தரப்பில் அந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வீதியில் இறங்கிய பொதுமக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக, டிசம்பர் 7ம் திகதி கொரோனா இல்லாத சமூகம் என்ற கடும்போக்கு நடவடிக்கைகளை ரத்து செய்தார் ஜி ஜின்பிங்.
@ap
ஆனால், கொரோனா தொற்றுடன் வாழப்பழகுங்கள் என்ற அடுத்த நடவடிக்கையானது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை விண்ணைத் தொட்டது.
தலைநகர் பெய்ஜிங்கில் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 248 மில்லியன் மக்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது மொத்த மக்கள் தொகையில் 18% பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதன்மை சுகாதாரத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உண்மையை ஒப்புக்கொண்ட ஜி ஜின்பிங்
மருத்துவமனைகள் ஸ்தம்பித்துள்ளதுடன், தகன இல்லங்களும் சடலங்களால் நிரம்பியது. இருப்பினும், டிசம்பர் மாதத்தில் ஒரே ஒருவர் மட்டுமே இறந்ததாக அரசாங்க அதிகாரிகள் கூறி வந்தனர்.
@ap
இந்த நிலையிலேயே ஜி ஜின்பிங் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளதுடன், நடவடிக்கைகளில் தவறு நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் உயிரையும் பொருளாதாரத்தையும் காக்கும் பொருட்டில் இனி நனடவடிக்கைகள் இருக்கும் எனவும், சவால்களை துணிவுடன் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஜனவரியில் மட்டும் நாளுக்கு 25,000 பேர்கள் சிகிச்சை பலனின்றி இறப்பார்கள் எனவும்,
டிசம்பர் 1ம் திகதி தொடங்கி நாளுக்கு 9,000 பேர்கள் இறந்துள்ளதாகவும் சீனாவின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு முதன்மை நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.
@ap
மேலும், நனவரி 13ம் திகதியில் இருந்து நாளுக்கு 3.7 மில்லியன் மக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் அந்த நிறுவனம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.