நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த கோவில் விழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 4 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஜனவரி 21 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.