மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
மழைக் காலங்களில் ஓடைகளில் வெள்ளம் செல்வதால் இந்த கோவிலிக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நிலையில், மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வரவிருக்கிறது.
இதனை முன்னிட்டு, நாளை (4-ம் தேதி) முதல் 7-ம் தேதி வரை சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால், நீரோட்டையில் குளிப்பதற்கும், இரவில் கோயிலில் தங்குவதற்கும் அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.