சென்னை: பட்ஜெட் விலையில் போக்கோ சி50 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் டிவைஸ்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம் தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வருகிறது போக்கோ. பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது போக்கோ.
அந்த வகையில் இப்போது பட்ஜெட் விலையில் போன்களை எதிர்பார்க்கும் பயனர்களை கருத்தில் கொண்டு போக்கோ சி50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்:
- 6.52 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே
- மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்
- 5000mAh திறன் கொண்ட பேட்டரி
- 10 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- 2ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ்
- 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ்
- நீலம் மற்றும் பச்சை நிறத்தில் இந்த போன் கிடைக்கிறது
- பின்பக்கத்தில் இரண்டு ஏஐ கேமரா உள்ளது
- 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 2ஜிபி வேரியண்ட் ரூ.6,249-க்கும், 3ஜிபி வேரியண்ட் ரூ.6,999-க்கும் கிடைக்கும்
Did someone order a phone with,
-6.52″ HD+ Display
-5000mAh Battery
-8MP Dual AI Camera
-Fingerprint Sensor‘cuz the POCO C50 is here to #SlayAllDay. Introductory price.
To all the hustlers out there, 1st sale on 10th Jan @ 12PM – https://t.co/aatGvVNWSY pic.twitter.com/rfcNY3iXoV— POCO India (@IndiaPOCO) January 3, 2023