பயணக் கட்டுப்பாடுகள் சீனா கொந்தளிப்பு| Travel restrictions China turmoil

பீஜிங், :’எங்கள் நாட்டைச் சேர்ந்த பயணியருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது’ என, சீனா கூறியுள்ளது. இதற்கான எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்றும் அந்நாடு எச்சரித்துள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணியர், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிப்பதை அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன.

நம் நாட்டிலும், சீனா உட்பட ஆறு நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியுள்ளதாவது:

சீனாவில் இருந்து வரும் பயணியருக்கு மட்டுமே கொரோனா சான்றிதழை கட்டாயமாக்கி சில நாடுகள் உத்தரவிட்டுள்ளன. இது ஒருதலைபட்சமானது.

அறிவியல் பூர்வமாக எந்த ஆய்வும் செய்யாமல் இவ்வாறு தடை விதித்துள்ளதை ஏற்க முடியாது. இதற்கான எதிர்வினையை இந்த நாடுகள் சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.