பிரதமர் யாருன்னு விவாதம் வந்ததுமே, தேன்கூட்டை கலைச்ச மாதிரி, எல்லாரும், சிட்டா பறந்துடுறாங்களே!| speech, statement,interview

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி:

லோக்சபா தேர்தலில், நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தான், பா.ஜ.,வை வீழ்த்த முடியும்; இதை உறுதியாக நம்பலாம். இதற்கு வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா என, சொல்ல முடியாது. அதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட வேண்டும். ‘தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்’என, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருமே இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டனர்; அதற்கான வாய்ப்பு நிச்சயம் உருவாகும்.

எல்லாம் பேசுறாங்க சரி… பிரதமர் யாருன்னு விவாதம் வந்ததுமே, தேன்கூட்டை கலைச்ச மாதிரி, எல்லாரும், ‘சிட்டா’ பறந்துடுறாங்களே!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்அறிக்கை:

தமிழக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், செவிலியர்கள் பற்றாக்குறை அதிக அளவில் நிலவுகிறது; ஆயிரக்கணக்கான செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

எனவே, மிகவும் ஆபத்தான கொரோனா பெருந்தொற்று காலத்தில், தற்காலிக செவிலியர்கள் பணியாற்றியதை கருத்தில் கொண்டும், தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்குடனும், அவர்களின் பணி நீக்க ஆணையை ரத்து செய்து, காலியாக உள்ள இடங்களில் அவர்களை அமர்த்தி, பணி நிலைப்பு செய்ய வேண்டும்.

latest tamil news

கொரோனா காலத்துல உயிரை பணயம் வைத்து வேலை பார்த்த தற்காலிக செவிலியர்களுக்கு அரசு நிச்சயம் ஏதாவது நல்லது செய்யணும்!

வி.சி., தலைவர் திருமாவளவன்பேட்டி:

அரசு ஒப்பந்தங்கள் எடுப்பது, கோவில் குளங்களில் மீன் பிடிக்க ஏலம் எடுப்பது உள்ளிட்டவற்றில், பட்டியலின மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இது தொடர்பாக, சட்டசபை கூட்டத் தொடரில்,கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்.

latest tamil news

சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம், பஸ் ஸ்டாண்ட் கடைகள் குத்தகை எல்லாம் விட்டு போச்சே… கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர்றதுக்கு முன்னாடி, கவனமா இதையெல்லாம் சேர்த்துக்கங்க!

தமிழக கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் வெங்கடாசலபதி பேட்டி:

அரசு ஊழியர்கள், கடன் வழங்கும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் தற்போது, 34 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள உயர்வால், 38 சதவீதம் கிடைக்கும்.

ஆனால், பொது வினியோக திட்டத்தை நடத்தும்தொடக்க கூட்டுறவு பண்டகசாலை அலுவலக பணியாளர்கள்,ரேஷன் கடை பணியாளர்கள், தற்போது, 31 சதவீதம் பெற்று வரும் நிலையில், இந்த உயர்வால், 35 சதவீதம் மட்டுமே அகவிலைப்படியை பெற முடியும். அனைவருக்கும் ஒரே மாதிரியாக, 38 சதவீதமாக அகவிலைப்படி வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்களை திருப்திபடுத்த அந்த ஆண்டவனால கூட முடியாது!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.