புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 16-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த புத்தாண்டு இரஎடை அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் இருந்து புகை கிளம்பியதைக் கண்ட குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர். இதையடுத்து உடனடியாக லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் மன்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்,
இதனைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் மணிகண்டன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நேற்று மாலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM