போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும்- முதலமைச்சர்

மருந்து வகைகள் போதைப்பொருட்களாக பயன்படுத்துவதால், மருத்துவத்துறையுடன் இணைந்து போலீசார் மருந்தகங்களில் தீவிர சோதனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், போதைப்பொருட்கள் தொடர்பாக பள்ளி, கல்லூரி பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

மேலும், கஞ்சா, குட்கா வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், விரைவில் வழக்கினை முடித்து தண்டனை பெற்றுத்தரவும் போலீசார் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.