இளவரசர் ஹரி அரச குடும்பத்திற்கு திரும்புவது குறித்த தனது திட்டத்தை வெளிப்படுத்தியுளளார்.
இளவரசர் ஹரி, தனது நினைவுக் குறிப்பு புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) வெளியீட்டிற்கு முன்னதாக ஒரு புதிய நேர்காணலில், தனது அரச எதிர்கால திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
நேர்காணல் நிகழ்ச்சிகள்
ஹரி இரண்டு நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஒன்று பிரித்தானியாவில் ஒளிபரப்பப்படும் மற்றும் மற்றொன்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும். இந்த நேர்காணலில் அவர் அரச குடும்பத்திற்குத் திரும்புவது குறித்து அப்பட்டமான பதிலைக் கொடுத்துள்ளார்.
Getty Images
அமெரிக்காவில், சிபிஎஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 60 Minutes-ன் சிறப்பு எபிசோடில் ஆண்டர்சன் கூப்பருடன் இளவரசர் ஹரி அமர்ந்திருந்தார். அதன் டீசர் வெளியாகியுள்ளது.
டீசரில், ஹரியை நேர்காணல் செய்த ஆண்டர்சன் “நீங்கள் அரச குடும்பத்தின் முழுநேர உறுப்பினராக திரும்பும் ஒரு நாளைப் பார்க்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு ஹரி “இல்லை” என்று எளிமையாகவும் அப்பட்டமாகவும் பதிலளித்தார்.
“எனக்கு ஒரு குடும்பம் தான் வேண்டும்..,”
நேர்காணலுக்கான டிரெய்லரில், “அரச குடும்பத்தின் சில உறுப்பினர்களைப் பாதுகாக்க நிறுவனம் அறிக்கைகளை வெளியிடும், ஆனால் மற்றவர்களைப் பாதுகாக்காது” என்றும் “எனக்கு ஒரு குடும்பம் தான் வேண்டும், ஒரு நிறுவனம் அல்ல” என்று கூறியுள்ளார்.
மேலும், “எங்களை எப்படியாவது வில்லன்களாக வைத்திருப்பது நல்லது என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என்றும், “அவர்கள் சமரசம் செய்ய முற்றிலும் விருப்பம் காட்டவில்லை” என்றும் கூறுகிறார், இருப்பினும் அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.