மெக்கா மெதினா இடையிலான புல்லெட் ரயிலை ஓட்டி வரலாறு படைக்கும் பெண்கள்!

ரியாத்: இஸ்லாமியர்களின் கோட்டை என்று அழைக்கப்படும் சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்கள் புல்லட் ரயிலை ஓட்ட உள்ளனர். சவுதி அரேபிய ரயில்வே நிறுவனம் 32 சவுதி பெண்களுக்கு பயிற்சி அளித்து பட்டதாரிகளாக்கியுள்ளது. உலகின் அதிவேக ரயில்களில் ஒன்றான ஹார்மோனியா எக்ஸ்பிரஸை, பயிற்சி பெற்ற இந்த பெண் ரயில் ஓட்டுநர்கள் ஓட்டுவார்கள். இந்த டிரைவர்கள் தற்போது ரயிலை ஓட்டுவதற்கான தகுதியை பெற்றுள்ளனர். இந்த பெண்கள் ரயிலை இயக்குவதற்கான பயிற்சியை அளித்தது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த பெண் ரயில் ஓட்டுநர்களின் பயிற்சியாளரான ரயில் கேப்டன் மோகன்நாத் ஷேகர் கூறுகையில், ஹர்மியான் ரயில், ஆண் மற்றும் பெண் கேப்டன்களுக்கு அளிக்கும் பயிற்சியின் மூலம் மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை அடைய முடியும். இந்த பெண் ரயில் ஓட்டுனர்கள் மேற்கு ஆசியா முழுவதிலும் முதல் பெண் ரயில் ஓட்டுனர்கள் என்ற பெருமையை பெறுகிறார்கள். இந்த வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்த பெண்களின் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றார்.

மேலும் படிக்க | 9/11 தாக்குதலுக்கு முன்பாக ஒசாமாவை கொல்லும் திட்டத்தை சொதப்பிய அமெரிக்கா!

ரயிலின் வேகம் மணிக்கு 450 முதல் 300 கி.மீ

ரயிலை ஓட்டுவதற்கான பயிற்சியின் போது, ​​சிமுலேட்டரில் ரயிலை இயக்க கற்றுக்கொடுத்ததாக பெண் டிரைவர் ஒருவர் கூறினார். இது அவர்களுக்கு உண்மையிலேயே ரயிலை ஓட்டும் அனுபவத்தை அளித்தது. பயிற்சியின் போது, ​​அவர்கள் உண்மையான பயணத்திற்கு புறப்படும் வகையில் ரயிலை ஓட்டும் முழு பயிற்சியும் அளிக்கப்பட்டது. சவுதி அரேபியா போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தனது கொள்கைகளை தொடர்ந்து மாற்றி வருகிறது. இந்த பெண்கள் தங்கள் இலக்கை தாமதமின்றி அடையும் வகையில் இதுபோன்ற பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சேகர் கூறினார்.

புனித நகரங்களான  மெக்கா மற்றும் மதீனா இடையே இந்த பெண்கள் புல்லட் ரயிலை ஓட்டுவார்கள் என்று கூறப்படுகிறது. மணிக்கு 450 கிமீ முதல் 300 கிமீ வேகத்தில் செல்லும் இந்த ரயில் உலகின் அதிவேக ரயில்களில் ஒன்றாகும். இது ஒரு முழுமையான மின்சார ரயிலாகும். 2018 ஆம் ஆண்டில் இஸ்லாத்தின் இரண்டு புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா இடையே இந்த ரயில் சேவை  தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இப்பணிக்கு 28,000 பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சவூதி அரேபியா பெண்கள் மீதான தனது சிந்தனையை மாற்றிக்கொண்டிருப்பதை இது தெளிவாக காட்டுகிறது.

மேலும் படிக்க | 2023 எப்படி இருக்கும்… பீதியை உண்டாக்கும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்!

மேலும் படிக்க | ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் புதிய தலைவராக உருவெடுத்தார் இஷா முகேஷ் அம்பானி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.