கோல்கட்டா: மே.வங்க மாநிலம் ஹவுரா-நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் மீது மர்மநபர்கள் இன்று(ஜன.,03) கல்வீச்சு நடத்தினர்.
மே.வங்க மாநிலம் ஹவுரா-நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 30ம் தேதி பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த ரயில் சேவை துவங்கி நான்கு நாட்கள் ஆகியுள்ளது.
இந்நிலையில் இன்று(ஜன.,03) வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டுள்ளது. இதில் ரயிலின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதல் மல்டா ரயில் நிலையத்தில் வைத்து நடத்துள்ளது. கல் வீசிய மர்ம நபர்கள் குறித்து ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement