ம.பி.,யில் 12 வயது சிறுமி 58 வயது நபரால் பலாத்காரம்| A 12-year-old girl was raped by a 58-year-old man in MP

போபால் மத்திய பிரதேசத்தில், 12 வயது சிறுமி, 58 வயது நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பேதுல் நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, 58 வயதான மாவு மில் உரிமையாளர் ரமேஷ் குல்ஹனே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்களும், பொதுமக்களும் ரமேஷின் வீட்டிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார், பைக்கை அடித்து நொறுக்கி, தீயிட்டு எரித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ரமேஷ் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், வன்முறையில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.