BJP: 'பாலியல் குற்றவாளி அண்ணாமலை! புகார் சொல்லி வெளியேறிய காயத்ரி ரகுராம்

சென்னை: ‘பாலியல் குற்றவாளி அண்ணாமலையே | பாஜக வை விட்டு ஓடிப் போ…’ என்று பாஜகவின் அண்ணாமலைக்கு சமூக ஊடகங்களில் நேரடியாக அதிரடி பதிவிட்ட சில மணி நேரத்திலேயே தான் தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக கனத்த மனதுடன் காயத்ரி ரகுராம் டிவிட்டர் பதிவிட்டுள்ளார். நடிகை காயத்ரி ரகுராம், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது இன்று தான் என்றாலும், இவரை கட்சி பொறுப்பில் இருந்து ஏற்கனவே அண்ணாமலை நீக்கியிருந்தது குறிப்பிடதக்கது.

பாஜகவில் அண்ணாமலை வந்த பின் விஷயங்கள் கைமீறி போய்விட்டது என்றும், அவர் தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக சமூக ஊடகங்களில் சில நாட்களாக நேரடி தாக்குதலில் இறங்கியிருந்தார் காயத்ரி ரகுராம்.

திருச்சி சூர்யா கொச்சையாக பேசியதற்கும், அண்ணாமலை பேசியதற்கும் வித்தியாசம் இல்லை என்று, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தற்போது பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்களை காயத்ரி ரகுராம் அம்பலப்படுத்தியிருக்கிறார். 

சொந்த கட்சியில் இருக்கும் பெண்களை மட்டும் அண்ணாமலை அவமதிப்பதாக கூறிய காயத்ரி, ஏன் அண்ணாமலை தனது மனைவியை பொதுவெளியில் காட்டவில்லை என்றும் கேள்வி எழுப்பி, அவரது இமேஜை டேமேஜ் செய்த காயத்ரி, சர்ச்சைகள் நீடிப்பதால் தனக்கு சில மாதங்கள் லீவ் வேண்டும் என அவர் டெல்லி பாஜகவிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் சொன்னது குறிப்பிடத்தக்கது. 

தேசிய கட்சி பாஜக என்பதை மறந்து கட்சி கூட்டத்தில் 150 பேருக்கு முன் என்னை அவமரியாதையாக பேசினார், இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. இனியும் இப்படி நடக்க கூடாது என்பதால் தான், விஷயங்களை அம்பலப்படுத்துவதாக காயத்ரி ரகுராம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தனது பேட்டியை தைரியமாக வெளியிட்ட பத்திரிக்கையாளருக்கும் நன்றி தெரிவித்தார் காயத்ரி, அதில், நேர்காணலுக்கு நன்றி திருமதி நர்மதா. நியாயமான கேள்விகளையும் விளக்கங்களையும் கொடுத்துள்ளீர்கள். ஒரு பெண்ணாக ஆதரவு அளித்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு எதிராக கடுமையான, அருவெறுப்பான, மோசமான தனிமனிதத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. பெங்களூர் வார் ரூம் மூலம் இந்த தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், தமிழக காவல்துறை இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் பதிவிட்ட காயத்ரி ரகுராம், தற்போது கட்சியில் இருந்து தான் விலகுவதாகவும் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

இன்று வேலு நாச்சியாரின் பிறந்த நாள், அவருக்கு எனது அஞ்சலிகள் என்று டிவிட்டர் செய்தி வெளியிட்டிருக்கும் காயத்ரி, போராடுவதற்கு என்றே பிறந்த அவர், தனக்கு ஆசி வழங்குவார் என்றும் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.