IRCTC-க்கு செய்த ட்விட்டால் வந்த வினை! ரூ.64,000 இழந்த பெண்!

சைபர் கிரைம் மூலம் பலர் மோசடிக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதாக கூறி மோசடி பேர்வழிகள் ஒரு பெண்ணிடம் இருந்து  ரூ.64,000 பறித்தனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண்ணே அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து OTP-ஐ நிரப்ப, அவளுடைய பணம் கணக்கில் இருந்து காணாமல் போனது.

IRCTC க்கு ட்வீட் செய்த பெண்

மோசடியினால் பாதிக்கப்பட்ட அந்த  பெண் மும்பையில் வசிப்பவர். அவரது பெயர் எம்.என்.மீனா. சமீபத்தில் அவர் IRCTC இணையதளம் மூலம் மும்பையிலிருந்து பூஜ் வரை ஜனவரி 14-ம் தேதிக்கு மூன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அவருக்கு   RAC டிக்கெட்டுகள்  கிடைத்த நிலையில், பின்னர் அவர் தனது டிக்கெட் நிலை குறித்து விசாரிக்க ஐஆர்சிடிசிக்கு தனது எண்ணையும் ரயில் டிக்கெட்டையும் ட்வீட் செய்தார்.

மொபைல் எண் வெளியிட்டதால் வந்த வினை

மொபைல் எண்ணை ட்வீட் செய்த தவறு அவருக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அவர் சைபர் மோசடிக்கு ஆளானார். அவரது எண்ணை தொடர்பு கொண்டு மோசடி பேர்வழிகள் அவளை சிக்க வைத்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் பேசி டிக்கெட் பெற்று தருவதாக கூறி, பின்னர் OTP உதவியுடன் அவரது கணக்கில் இருந்து 64 ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு அழைப்பு வந்ததும், ரயில்வே சார்பில் பேசுவதாக ஒருவர் தொலைபேசியில் கூறியதும், அதனை அவர் நம்பி ஓடிபி எண்ணை அளித்ததும் தான் அவர் செய்த பெறும் தவறு.

கணக்கு விபரங்களை வெளியிட்ட பெண்

அந்தப் பெண் ட்வீட் செய்தபோது, ​​​​அவரது ட்வீட்டிற்குப் பிறகு, ரயில்வே சேவையைச் சேர்ந்தவர்கள் தன்னை அழைத்ததாக அந்தப் பெண் நம்பி விட்டார். இதற்குப் பிறகு, மோசடி ஆசாமிகள் அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு படிவம் நிரப்பி வாங்கிக் கொண்டனர். அந்தப் பெண் அதில் தனது கணக்கு விவரங்களைச் சமர்ப்பித்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் OTP ஐ சேமித்தவுடன், அவரது கணக்கில் இருந்த பணம் காணாமல் போனது.

சைபர் கிரைமில் வழக்கு பதிவு

மோசடியில் சிக்கிய அந்த பெண் தான் தவறு செய்ததை உணர்ந்தார். சைபர் கிரைமில் அவர் வழக்கு பதிவு செய்தார். பெண்ணின் இந்த கதை சமூக வலைதளங்களில் வைரலானதும், மக்கள்  அந்த பெண்ணிற்கு பாடம் எடுக்க ஆரம்பித்தனர். இருப்பினும், இது குறித்து பல கலவையான எதிர்வினைகளும் வெளிவந்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.