ஆசிய நாட்டவர்கள் கொண்ட கும்பல் ஒன்று தன்னைக் கடத்தி வன்புணர்ந்ததாக பிரித்தானிய இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, அவர் சொன்னது பொய் என்பது தெரியவந்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னைக் கடத்தி பாலியல் தொழிலில் பயன்படுத்தியதாக தெரிவித்த இளம்பெண்
இங்கிலாந்தில் வாழும் Eleanor Williams (22) என்னும் இளம்பெண், தன்னை ஆசிய கடத்தல்காரரான Shaggy Wood என்பவர் தன்னைக் கடத்தியதாகவும், Mohammad Ramzan என்பவர் தனக்கு 12 வயது இருக்கும்போதிலிருந்தே தன்னை மயக்கி ஆம்ஸ்டர்டாமிலுள்ள பாலியல் விடுதிகள் பணி செய்ய வைத்ததாகவும், தன்னை ஏலம் விட்டதாகவும் குற்ரம் சாட்டிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி பலர் மீது பாலியல் குற்றம் சாட்டியிருந்தார் Eleanor.
2020ஆம் ஆண்டு, மே மாதம், தாக்கப்பட்டு, முகத்தில் பலத்த காயத்துடன் Eleanor சமூக ஊடகங்களில் வெளியிட்ட படங்களைக் கண்ட மக்கள் கொந்தளித்து, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் வரை விடயம் சீரியஸானது.
தெரியவந்த உண்மையால் அதிர்ச்சி
ஆனால், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல உண்மைகள் தெரியவந்துள்ளன. Eleanor தன்னை Mohammad Ramzan ஏலம் விட்டதாக கூறிய நேரத்தில் அவர் பல்பொருள் அங்காடி ஒன்றில் தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
மேலும், Eleanor குற்றம் சாட்டிய சில நபர்கள் உண்மையில் உலகிலேயே இல்லை.
ஆக, Eleanor போலியாக இணையத்தில் சிலரது பெயர்களைத் தேர்வு செய்து அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறியது தெரியவந்தது.
அத்துடன், தன்னைத்தான் வேண்டுமென்றே சுத்தியலால் தாக்கிக்கொண்டதாலேயே அவரது முகத்தில் காயங்கள் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
எனவே, பொய்யாக குற்றம் சாட்டி நீதிமன்றத்தை ஏமாற்றிய Eleanor கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது எட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், Eleanorஇன் குற்றச்சாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தாக்குதலுக்குள்ளாகி, அவர்கள் பெயர் கெட்டுப்போனது. Eleanorஇன் குற்றச்சாட்டுகளால் தங்கள் வாழ்வே நாசமாகிப்போனதாக தெரிவித்துள்ளார் Mohammad Ramzan.