பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை பகுதியில் நேற்று நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் விவசாயிகளிடம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டார வேளாண்மை துறை சார்பில், நேற்று ஆர்.கே.பேட்டையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடமாடும் வாகனத்தின் மூலம் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியாக, விவசாயிகளின் மண் மாதிரிகளை பரிசோதனை செய்தனர். இதன்மூலம் விவசாயிகள், தங்கள் நிலத்தின் மண்ணை பரிசோதித்து, உரிய முறையில் மகசூல் பெறும் பயிர்களை சாகுபடி செய்வதால் மகசூலை அதிகரித்து இரட்டிப்பு லாபம் பெறமுடியும் என்று வேளாண்மை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு மண்வளத்துறை அதிகாரி கனிமொழி தலைமை தாங்கினார். இதில் ஜெயா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஜெயசந்திரன், கார்த்திக், கிருபாகரன், குகன், லோகேஸ்வரன், முருகன், நவீன்குமார், சாய்சந்திரா, சஞ்சய் ஆகியோர் நேரடியாக விவசாயிகளின் நிலங்களுக்கு சென்று, அந்நிலங்களின் மண் மாதிரிகளை சேகரித்து, நடமாடும் வாகனத்தின் மூலம் பரிசோதித்தனர். இதில் ஆர்.கே.பேட்டை வேளாண் அலுவலர் த.ரூபா, உதவி வேளாண் அலுவலர்கள் ஷேக், வானதி, தனிஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.