இடஒதுக்கீடு இல்லாமல் உபி உள்ளாட்சி தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலை பிற்பட்டோர் பிரிவு இடஒதுக்கீடு இல்லாமல் நடத்தலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. உத்தரப்பிரதேச ஆளும் பாஜ அரசு  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது. இதில் மாநகராட்சிகள்,பஞ்சாயத்து ஒன்றியம், நகர பஞ்சாயத்துகளின் தலைவர் பதவிகளுக்கு ஜாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த பதவிகளுக்கு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடுட்டில்  உபி அரசின்  உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இடஒதுக்கீடு எதனையும் பின்பற்றாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த  உத்தரவிட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, இடஒதுக்கீடு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து  நேற்று உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.