வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மேயராகவும், 12 ஆண்டுகளாக நகர மேம்பாட்டுக் குழுவில் இருக்கும் எரிக் கார்செட்டி கடந்த ஆண்டு இந்தியாவுக்கான தூதராக பரிசீலனையில் இருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவராக இருந்த கென்னெத் ஜஸ்டரின் பதவிக்கு 50 வயதுடைய எரிக் கார்செட்டி அமர்த்தப்பட்டுள்ளார்.
எரிக் கார்செட்டி
:
* ஆக்ஸ்போர்டில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் படித்த கார்செட்டி, லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் கல்லூரில் பட்டம் பெற்றவர். லாஸ் ஏஞ்செல்ஸ் நகர மேயராக இருந்த கார்செட்டி, மேற்கு ஹெமிஸ்பியரில் உள்ள உலகிலேயே பரபரப்பான கன்டெய்னர் துறைமுகத்தை நிர்வாகம் செய்தவர்.
* கடந்த 30 ஆண்டுகளில் மீண்டும் கோடைகால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்குப் பெற்றுக்கொடுத்தவர்.
* பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை ஏற்கக் கோரி அமெரிக்காவின் 400 மேயர்களை ஒருங்கிணைத்து காலநிலைக்கான மேயர் கூட்டமைப்பை கார்செட்டி உருவாக்கினார்.
* உலகில் உள்ள 97 முக்கிய நகரங்கள் காலநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, அந்த நகரங்களின் கூட்டமைப்பின் தலைவராகவும் கார்செட்டி உள்ளார்.
* கடந்த 12 ஆண்டுகளில் அமெரிக்க கடற்படையின் உளவுத்துறை அதிகாரியாகவும், பாதுகாப்புத்துறையின் உளவுப்பிரிவிலும் கார்செட்டி பணியாற்றி கடந்த 2017ம் ஆண்டு லெப்டினென்டாக ஓய்வு பெற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement