வாஷிங்டன்,:இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக லாஸ் ஏஞ்சலஸ் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டியின் பெயரை அதிபர் ஜோ பைடன் மீண்டும் பரிந்துரை செய்துள்ளார்.
இந்தியாவுக்கான துாதராக லாஸ் ஏஞ்சலஸ் முன்னாள் மேயர் எரிக் கார்செட்டி, ௫௧, பெயரை அதிபர் ஜோ பைடன், ௨௦௨௧ ஜூலையில் பரிந்துரை செய்திருந்தார்.
ஆனால் குடியரசுக் கட்சி எம்.பி.,க்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கார்செட்டி அலுவலக ஊழியர் ஒருவர் முறைகேடாக நடந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, அந்தப் பரிந்துரையை அரசு திரும்பப் பெற்றது.
இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக, கார்செட்டியின் பெயரை அதிபர் ஜோ 0பைடன் மீண்டும் பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கெரின் ஜீன் பியரே கூறியதாவது:
வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் கூறியுள்ளபடி, இந்தியா உடனான நம்முடைய உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் இந்த முக்கிய பதவிக்கு கார்செட்டியின் பெயர் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியர்களுக்கு பதவி
அமெரிக்க பார்லிமென்டின் ௧௧௮வது கூட்டம் நேற்று துவங்கியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செனட் சபை உறுப்பினர்கள் பதவியேற்றுள்ளனர். பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.கடந்த பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட சில நியமன பரிந்துரைகள் குறித்து முடிவெடுக்கப்படாமல் இருந்தன. இதையடுத்து புதிய நியமனங்களுக்கான பரிந்துரைகளை அதிபர் ஜோ பைடன் செய்துள்ளார். இந்த நியமனங்களில் ஆறு பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க துாதர் ரிச்சர்ட் வர்மா, நிர்வாகம் மற்றும் வளம் துறையின் இணைச் செயலர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக இருந்துள்ள விவேக் மூர்த்தி, உலக சுகாதார அமைப்பின் செயல் வாரியத்தின் அமெரிக்க பிரதிநிதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.ராணுவ துறையின் துணை இணைச் செயலராக ராதா அய்யங்கார் பல்ப், சர்வதேச பெண்கள் பிரச்னைகள் துறையின் துாதராக கீதா ராவ் குப்தா, விமானப் படையின் உதவிச் செயலராக ரவி சவுத்ரி, முன்னாள் படைவீரர்கள் விவகாரத் துறை வழக்கறிஞராக அஞ்சலி சதுர்வேதி ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement