சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F04 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அறிமுகத்தை முன்னிட்டு விலையில் குறுகிய கால சலுகையை கொண்டுள்ளது இந்த போன்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது கேலக்சி F04 ஸ்மார்ட்போன்.
சிறப்பு அம்சங்கள்
- 16.55 சென்டிமீட்டர் ஹெச்டி+ டிஸ்ப்ளே
- மீடியாடெக் பி35 பிராசஸர்
- 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
- இரண்டு ஆண்டுகள் இயங்குதள அப்டேட்
- பின்பக்கத்தில் 13 மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட இரண்டு கேமரா
- 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5000mAh திறன் கொண்டுள்ளது பேட்டரி
- இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் வரும் 12-ம் தேதி விற்பனைக்கு வருகிறது
- இதன் விலை ரூ.9499. இருந்தாலும் 2 ஆயிரம் ரூபாய் வரையில் இதில் அறிமுக சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
It’s #F4Fast, and it’s F 4 Finally here. The new Samsung Galaxy F04 comes loaded with amazing features, and you can grab one before anyone else. Match the features correctly and leave the right answers in the comments to win the #GalaxyF04, F 4 Free. T&C apply. pic.twitter.com/FN8kosSJgT
— Samsung India (@SamsungIndia) January 4, 2023