இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி நாளை

சுற்றுலா இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி நாளை (05) நடைபெறவுள்ளது.

இந்த்ப போட்டி புனே (Pune) யில் நாளை (05) இரவு ஏழு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை ,இரு அணிகளுக்கிடையில் , மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (03) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றது. 

இந்திய அணி சார்பில் Deepak Hooda  41 ஓட்டங்களையும், Ishan Kishan 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதையடுத்து 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் தசுன் சானக்க 45 ஓட்டங்களையும், சாமிக்க கருணாரத்ன 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணி சார்பில் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணி வீரரான தீபக் ஹுடா Deepak Hooda  தெரிவு  செய்யப்பட்டார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.