”எல்லா மதத்தவருக்கும் பொதுவானவன் நான்: உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை” – அமைச்சர் உதயநிதி

”போனமுறை கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்னது வைரல் ஆனது. இப்போது புத்தாண்டு வாழ்த்துகள், தை திருநாள் வாழ்த்துகள் சொல்கிறேன், ஏன் ரம்ஜான் வாழ்த்துகள் கூட சொல்வேன், நான் எல்லோருக்கும் பொதுவானவன் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக என்றும் இருப்பேன்” என்று பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா வில்லிவாக்கத்தில் உள்ள சிவசக்தி காலணி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவியர்க்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி மாறன், வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ அ.வெற்றியழகன், சென்னை மாவட்ட மேயர் ஆர். பிரியா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ஆயிரம் கல்லூரி மாணவ மாணவியர்க்கு தலா பத்தாயிரம் ரூபாய் மற்றும் புத்தகப்பை, குறிப்பேடுகள் போன்றவை வழங்கப்பட்டது.
image
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, ”முதல்வரின் உத்தரவுபடி அப்பழுக்கற்ற பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு விழாவை 13 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு 6ஆவது விழாவாக கல்லூரி மாணவ மாணவியர்க்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி
சுற்றி சுழன்று கொண்டிருக்கும் போர்வீரணை போல் செயல்பட்டு வருகிறார்” என்றார்.
image
தயாநிதிமாறன் பேசுகையில், ”முதல் பந்தில் சிக்சர் அடித்தை போல அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்றதும் 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானம் என அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின். சென்னையில் சில தினங்களுக்கு முன்பு மழை வந்தது, ஆனால் எங்கேயும் மழைநீர் தேங்கி நிற்கவில்லை, அவ்வாறு சிறப்பாக செயல்பட்டார் நம் தமிழக முதல்வர். சென்னை வாசிகள் இரண்டு பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவார்கள். மழை வந்தால் தண்ணிர் நிற்கிறது என்றும், கோடை காலங்களில் குடிநீர் வேண்டும் என்றும் கூறுவர். ஆனால் நம் முதல்வர் ஆட்சியில் பொறுப்பேற்றதில் இருந்து இந்த இரு பிரச்சனைகளும் வரவில்லை. தொடர்ந்து மத வாத சக்திகளை எதிர்த்து களமாடுகிறார் தமிழக முதல்வர். ஒன்றிய அரசு தமிழக மாணவர்ககளுக்கு நீட், ஹிந்தி திண்ணிப்பு போன்ற பிரச்சினைகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது. அதனை எதிர்த்து முதலில் குரல் கொடுப்பவர் நம் முதல்வர் மட்டும் தான். தொடர்ந்து உதயநிதி அவர்களும் குரல் கொடுப்பார்” என்றார்.
image
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”சென்னை கிழக்கு மாவட்டம் எனக்கு மிகவும் நெருக்கமான மாவட்டம். நான் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று இருந்தாலும் அதிக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது கிழக்கு மாவட்டம் நிகழ்ச்சிகளில் தான். அண்ணன் சேகர் பாபு அவர்களிடம் கோரிக்கையாக என்னை மற்ற மாவட்டங்களிலும் வேலை செய்ய விடுங்கள் என கேட்டுகொள்கிறேன். சேகர் பாபு அண்ணனிடம் மற்ற மாவட்ட தலைவர்கள் விழா எப்படி நடத்த வேண்டும் என கற்று கொள்ள வேண்டும். சேகர் பாபுவை போல உருவ ஒற்றுமை கொண்ட இன்னொருவர் இருக்க வேண்டும், அவரால் தான் இப்படி ஒரு கூட்டத்தை நடத்த முடியும். பேராசிரியர் பேரனுக்கு கலைஞர் பேரன் நான் வாக்கு கேட்டு வந்துள்ளேன் எல்லோரும் வாக்களியுங்கள் என கேட்டேன், எனக்கு நன்றாக நினவு இருக்கிறது. நான் வெற்றிபெறுவது முக்கியம் அல்ல வெற்றி வெற்றி பெற வேண்டும் என்று கூறினேன்.
image
போனமுறை கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்னது வைரல் ஆனது. இப்போது புத்தாண்டு வாழ்த்துகள், தை திருநாள் வாழ்த்துகள் சொல்கிறேன், ஏன் ரம்ஜான் வாழ்த்துகள் கூட சொல்வேன். நான் எல்லோருக்கும் பொதுவானவன் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக என்றும் இருப்பேன்” என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.