நாக்பூர்: இந்திய விண்வெளிஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) முதல்முறையாக எஸ்எஸ்எல்வி எனப்படும் சிறிய செயற்கைக் கோள்களுக்கான ராக்கெட்டை தயாரித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி விண்ணில் ஏவிய எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சிறிய செயற்கைக் கோள்களுக்கான எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை அடுத்த மாதம் மீண்டும் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதுபற்றி நிருபர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், “குறைந்த எடை கொண்ட செயற்கைகோள்களுடன் அடுத்த மாதம் எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படும்” என்றார்.