ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றை தொடர்ந்து கண்காணித்து வந்த வருமான வரித்துறை இன்று காலை அதிரடியில் இறங்கியது. இந்நிறுவனத்திற்கு தொடர்புடைய தமிழகத்தில் உள்ள சுமார் 30 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இத்தகைய சோதனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ரெய்டு நிறுவனம், சோதனை நடைபெறும் இடங்கள், சிக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அதேசமயம் இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பது பேச்சு அடிபடுகிறது.