கண்டி மாவட்ட செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும்; அவற்றை மேற்பார்வை செய்வதற்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் கண்டி மாவட்ட செயலாளர் திரு.சந்தன தென்னகோனின் ஆலோசனைக்கு அமைவாக, மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த கண்டி மாவட்ட செயலாளர் திரு.சந்தன தென்னகோன், பல்வேறு தேவைகளுக்காக மாவட்ட செயலகத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு மிகக் குறுகிய நேரத்திற்குள்; சேவைகளை வழங்குவதுடன், சேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பட்சத்தில் மாற்று தீர்வும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
பொது மக்களின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய அலுவலக அதிகாரி ஒருவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அந்த அதிகாரியால் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அலுவலக அதிகாரியால் செய்ய முடியாத விடயங்கள் காணப்படுமாயின், அவற்றுக்கு உயர் அதிகாரியினால் அல்லது வேறு நிறுவனத்துடன் இணைந்து நடவடி;கை மேற்கொள்ளப்படும் என கண்டி மாவட்ட செயலாளர் திரு.சந்தன தென்னகோன் மேலும் தெரிவித்தார்.