சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 6 ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர அலுவல்களுக்காக அரசு அலுவலகங்களில் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 28ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.