டெல்லி: டெல்லியில் பனிமூட்டம் காரணமாக பெரும்பாலான ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடுமையான குளிர், அடர்ந்த மூடுபனி காரணமாக டெல்லி நோக்கி வரும் ரயில்கள் 4 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இயக்கப்படுகிறது. சூப்பர் பாஸ்ட், பிரிமீயம் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.