தென் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படவில்லை என்ற வாக்குறுதி பற்றிய கேள்விக்கு, ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தருவோம் என்றார்கள். மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் கொடுப்போம் என்றார்கள். இதுவரை கொடுக்கவில்லை. எத்தனையோ வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள்.
மின் கட்டணம் மாதமாதம் கணக்கிடுவோம் என கூறினார்கள். தற்போது டிஜிட்டல் மீட்டர் வந்த பிறகுதான் எடுப்போம் என்கிறார்கள். அது எப்போது வருவது இவர்கள் எப்போது மாதமாதம் கணக்கிடுவது அதற்குள் ஆட்சியே முடிந்துவிடும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
முன்னதாக திமுக அரசை அதிகமாக பாராட்டுவதால், திமுகவுடன் கூட்டணி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “எந்த ஆட்சியாக இருந்தாலும் நல்லது செய்தால் பாராட்டுவோம், கெட்டது செய்தால் போராடுவோம். திமுக அதிமுக வேறுபாடு கிடையாது. இரண்டு கட்சிகளுமே ஆட்சி செய்தால், சரியான திட்டங்களை வரவேற்போம், தவறான திட்டங்களை எதிர்ப்போம், போராடுவோம்.
திமுக ஆட்சியிலும் தற்பொழுது நல்ல திட்டங்களை வரவேற்கிறோம். மோசமான திட்டங்கள் வந்தால் கடுமையான போராட்டங்களையும் நாங்கள் நடத்தி இருக்கிறோம். எங்களுடைய கோரிக்கையின் பேரில்தான் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்தை கொண்டு வந்தார்கள்” என அன்புமணி பேசினார்.