வீழ்ச்சி கண்ட நாட்டை ஜனாதிபதி வழமை நிலைக்கு முன்னெடுத்து வருகின்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரின் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக நாட்டை மீண்டும் சீர்குழைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் கூறும் வகையில் பாரிய தொகை நாணயத்தாள்களை அச்சடித்து இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்றை நடத்தினால் மக்கள் மிக மோசமான நிலைக்கு உள்ளாவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீ கொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மாற்றமொன்றை இளைஞர் யுவதிகள் கோரி நிற்கின்றனர்.
இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார்.
இருப்பினும் எதிர்க்கட்சி முன்னைய வேலைத்திட்டங்களிலேயே செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.