வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி கீழ் உள்ள துறைகளின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ரூ. 25 ஆயிரம் கோடி நிதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அணுராக் தாக்குர் கூறியது, மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான, ‘பிரசார் பாரதி நிறுவனத்தின் ஒளிபரப்பு .உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 25 ஆயிரத்து 539 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிதி வாயிலாக பிரசார் பார்தியின் கீழ் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியன தரம் உயர்த்திட பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement