பிருத்விராஜ் படத் தலைப்புக்கு எதிர்ப்பு
விபுன்தாஸ் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிக்கும் புதிய படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' என்று தலைப்பு அறிவிக்கப்பட்டது. 'குருவாயூர் கோவில் சந்நிதானத்தில்' என்பது இதன் பொருள். இந்த தலைப்புக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
குருவாயூரப்பன் உலக முழுக்க உள்ள இந்துக்களின் கடவுள். அந்த பெயரை அவர் பெயரால் எடுக்கப்படும் பக்தி படம் தவிர வேறு எந்த படத்திற்கும் சூட்டக்கூடாது. என்று கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. படத்தின் கதையை இந்துமத ஞானிகளிடம் கொடுத்து அவர்கள் ஒப்புதல் பெற்ற பிறகு வேண்டுமானால் வைக்கலாம். பணம் செலவு செய்து படத்தை எடுத்த பிறகு எதிர்ப்பால் படம் முடங்கினால் அது தயாரிப்பாளுருக்குத்தான் நஷ்டம், என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது. படத்தின் தலைப்பை மட்டும் வைத்து ஒரு படத்தை தீர்மானிக்க கூடாது. படம் தயாரான பிறகு அதில் ஆட்சேபம் இருந்தால் கருத்து தெரிவிக்கலாம் என்று தலைப்புக்கு ஆதரவான கருத்துகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.