புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைராண்டி ஏரியில் குளித்த பட்டியலின பெண்களை திட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏரியில் மீன் ஏலம் எடுத்திருந்த ஐயப்பன், முருகானந்தம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீன்பிடித்த பட்டியலின சிறுவர்களை திட்டியும், ஏரியில் குளித்த பட்டியலின பெண்களை அவதூறாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.