பெப்ரவரி மாதம் யாழில் 'வடக்கின் ஒளிமயம்' நிகழ்ச்சித்திட்டம்

யாழ் மாவட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் நடைபெறவுள்ள ( Glocal Fair – 2023) “வடக்கின் ஒளிமயம்” நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் இன்று (04) காலை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் ஆலோசனைகளையும் விழிப்புணர்வுகளையும் வழங்குவதற்காகவும், தொழில் தொடர்பான பிரச்சினைகள், EPF மற்றும் ETF பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகாணும் நோக்கில் இந்த நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Logini Sakayaraja

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.