உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு தனது PSG கிளப்பிற்கு திரும்பிய லியோனல் மெஸ்ஸியை, நெய்மர் புன்னகையுடன் வரவேற்றார்.
ஆனால், மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியிடம் உலக்கோப்பை இறுதிப் போட்டியில் தொல்வியை சந்தித்த பிரான்ஸ் அணியின் கேப்டன் கைலியின் எம்பாப்பே, மெஸ்ஸி வரும் வேளையில், அங்கு இல்லவே இல்லை.
PSG அணியுடன் இணைந்தார் மெஸ்ஸி
மெஸ்ஸி உலக்கோப்பை வெற்றி கொண்டாட்டங்களுக்கு பிறகு 10 நாள் இடைவெளிக்கு பிறகு செவ்வாய்க்கிழமையன்று PSG அணியுடன் இணைந்தார். அதையடுத்து, புதன்கிழமையன்று அவர் தனது சக அணியினருடன் வரும் வெள்ளிக்கிழமை Chateauroux-க்கு எதிரான Coupe de France மோதலுக்கு தனது அணியினருடன் பயிற்சியில் இணைந்தார்.
அப்போது அவர் பயிற்சி மைதானத்திற்குள் நுழையும்போது, PSG அணியினர் உலகக்கோப்பை சாம்பியனான மெஸ்ஸியை முறையாக வரவேற்று மரியாதை செலுத்தினர். மெஸ்ஸிக்கு PSG-ன் ஆலோசகர் Lluis Campos சிறப்பு நினைவு பரிசும் வழங்கி கௌரவித்தார்.
புன்னகையுடன் வரவேற்ற நெய்மர்
மெஸ்ஸி நுழையும்போது அனைவரும் அவருக்கு கைதட்டி ஆரவாரப்படுத்தினர். முதல் ஆளாக பிரேசில் வீரர் நெய்மர் நின்று மெஸ்ஸியை புன்னகையுடன் வரவேற்றார்.
செவ்வாயன்று மெஸ்ஸி பயிற்சி கூடத்திற்குள் நுழைந்தபோதே நெய்மர் அவரை மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி கட்டியணைத்து மெஸ்ஸியை வரவேற்றார்.
🎥🔙
Vivez le retour à l’entraînement de 𝙻𝚎𝚘 𝙼𝚎𝚜𝚜𝚒 en vidéo ! ⤵️ pic.twitter.com/9q7kVO9ryH
— Paris Saint-Germain (@PSG_inside) January 4, 2023
கைலியின் எம்பாப்பே எங்கே?
அனால், இதில் எங்குமே கைலியின் எம்பாப்பேவை காணவில்லை.
ஞாயிற்றுக்கிழமை லென்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் கைலியன் எம்பாப்பே உட்பட பல வீரர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணிக்காக ஹாட்ரிக் கோல் சாதனை படைத்த 24 வயதான கைலியின் எம்பாப்பே, இறுதிப்போட்டிக்கு பிறகு எங்கும் பெரிதாக செல்லவில்லை என்பதால், இந்த விடுமுறையை அவர் நியூயார்க்கிற்குச் செல்ல பயன்படுத்திக்கொண்டார்.
அவருடன் PSG அணி வீரர் அக்ரஃப் ஹக்கிமியும் சென்றுள்ளார். திங்கள்கிழமை இரவு, இருவரும் நியூயார்க்கில் நடந்த Brooklyn Nets மற்றும் San Antonio Spurs இடையிலான NBA போட்டியை கண்டுகளித்தனர்.
அங்கு, Mbappe பெரிய திரையில் காட்டப்பட்டபோது NBA மைதானத்திற்குள் ரசிகர்களால் நம்பமுடியாத வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Barclays Center just went wild when Kylian Mbappé was shown on Who’s In The House. pic.twitter.com/jLkqHfmC2t
— Chris Milholen (@CMilholenSB) January 3, 2023