2022-ல் நான்கு லட்சம் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கிய கனடா!


கனடா 2022-ல் 437,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை வழங்கியுள்ளது.

கனடா கடந்த ஆண்டு 437,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கியதன் மூலம் புதிய குடியேற்ற சாதனையை படைத்துள்ளது என்று கனேடிய அரசாங்கம் செவ்வாயன்று அறிவித்துள்ளது.

4.3 லட்சம் பேருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி

2022-ஆம் ஆண்டில் 431,645 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க அரசாங்கம் இலக்கை நிர்ணயித்த கனேடிய அரசாங்கம், அந்த இலக்கை அடைந்து கனேடிய வரலாற்றில் அதிக மக்களுக்கு குடியிருப்பு அனுமதி வழங்கியதாக குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.

2022-ல் நான்கு லட்சம் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கிய கனடா! | Canada Permanent Residency 437000 Foreigners 2022Shutterstock

2021-ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டிற்கான எண்ணிக்கை சுமார் 9% அதிகமாகும், கனடா 1913-ல் நிறுவப்பட்ட முந்தைய சாதனையை முறியடித்தது, மேலும் கனடா 2025-இறுதிக்குள் 1.45 மில்லியன் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களைக் கொண்டுவர முயல்கிறது.

தொழிலாளர் பற்றாக்குறை

கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் கனடா கவனம் செலுத்துவதால், குடியேற்றம் தீர்வின் முக்கிய பகுதியாகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிரந்தர குடியிருப்பு அனுமதி (Permanent Residency) உள்ளவர்கள் பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

கனடாவின் தொழிலாளர் வளர்ச்சியில் கிட்டத்தட்ட 100% குடியேற்றம் ஆகும், மேலும் 2036-ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோர் கனடாவின் மக்கள்தொகையில் 30% வரை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள், இது 2011-ல் 20.7% ஆக இருந்தது.

2022-ல் நான்கு லட்சம் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கிய கனடா! | Canada Permanent Residency 437000 Foreigners 2022

பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் 2015-ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கனேடிய பொருளாதாரத்தை உயர்த்தவும், வயதான மக்களுக்கு ஆதரவளிக்கவும் குடியேற்றத்தை நம்பியுள்ளது.

ஹெல்த்கேர் போன்ற தொழில்களில் திறமையான பணியாளர்களின் பற்றாக்குறை கடுமையாக உள்ளது மற்றும் சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகள் அக்டோபர் மாதத்தில் 871,300 வேலை காலியிடங்கள் இருப்பதாகக் காட்டுகிறது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.