ஆவின் நிறுவனத்தில் 2020 – 2021-ம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் காலியாக இருந்த மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்களின் பணியிடங்கள் கடந்த 2020 – 2021-ம் ஆண்டுகளில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்பட்டன. இதையடுத்து, தகுதியில்லாத நபர்களுக்கு பணி வழங்கியது, எழுத்துத் தேர்வு வினாத்தாள் வெளியானது, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
ஆவின் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையிலான குழு இதுகுறித்த புகாரை விசாரித்து வந்த நிலையில், அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த 2020 – 2021-ம் ஆண்டுகளில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 147 பணி நியமனத்திற்கான அறிவிப்புகளை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.