மறைந்த முன்னாள் போப் ஆண்டவர் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகள் போப் பிரான்சிஸ்ஸின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.
போப் பெனடிக்ட்டின் மறைவு
உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த முன்னாள் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அவரது சைப்ரஸ் கலசமானது, பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மற்ற இரண்டு சவப்பெட்டிகளுக்குள் நாணயங்கள், பதக்கங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
@AP
600 ஆண்டுகளில் முதல் முறை
சுமார் 600 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக போப் ஆண்டவராக இருக்கும் ஒருவர், மறைந்த போப்பிற்கு இறுதிச் சடங்குகளை செய்ய உள்ளார்.
பெனடிக்ட்டின் சவப்பெட்டியில் நாணயங்கள் மற்றும் பதக்கங்களுடன் ரோகிடோ என்று அழைக்கப்படும் வரலாற்று போப் ஆண்டவரின் எழுத்துப்பதிவும் இருக்கும்.
முன்னதாக, தனது இறுதிச் சடங்கு எளிமையாக நடைபெற வேண்டும் என பெனடிக்ட் விரும்பியுள்ளார்.
இறுதிச் சடங்கு பிரார்த்தனை
இந்த நிலையில் வாட்டிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி பிரார்த்தனைகள் குறித்து கூறுகையில், ‘ஆராதனைக்கான வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் ஆட்சியில் இருக்கும் போப்பிற்கான வழிபாட்டு முறைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சில சிறிய மாற்றங்கள் இருக்கும்.
ஆண்ட போப்பின் மரணத்திற்கு குறிப்பிட்ட சில பிரார்த்தனைகள் தவிர்க்கப்படும். ஆனால், பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் இருவருக்கும் பிரார்த்தனைகள் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
இறுதிச் சடங்கிற்கு பின் சைப்ரஸ் சவப்பெட்டி ஒரு துத்தநாக சவப்பெட்டியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும். பின்னர் இரண்டும் போப் அடக்கம் செய்யும் பாரம்பரிய முறைப்படி, மரத்தால் செய்யப்பட்ட மற்றொரு சவப்பெட்டியில் வைக்கப்படும்.