7 நாட்களில் கொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் அதிகரிப்பு! பீதி ஏற்படுத்தும் கோவிட்

நியூடெல்லி: உலகளவில் 7 நாட்களில் 29 லட்சம் புதிய கொரோனா வழக்குகளும், 24 மணி நேரத்தில் இந்தியாவில் 134 புதிய வழக்குகளும் பதிவாகியுள்ளன.கடந்த ஏழு நாட்களில் ஒரு சில நாடுகளில் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் பெரிய அளவிலான அதிகரிப்புக் காணப்படுகிறது. புத்தாண்டுக்கு முன்னதாகவே சீனாவில் கொரோனா அதிகரித்து நிலைமை மோசமாக உள்ள நிலையில், உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது  கவலையளிக்கிறது.

சீனாவில், கடந்த ஏழு நாட்களில் 37,149 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் மற்றும் ஒன்பது பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில், கடந்த ஏழு நாட்களில் 37,804 நோயாளிகளுக்கு கொரோனா பாசிடிவ் என்று  கண்டறியப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஒரு வாரத்தில் கோவிட் நோய்க்கு 372 பேர் பலியானார்கள். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

இருப்பினும், இந்தியாவில் பாதிப்பு அளவு கட்டுக்குள் உள்ளது. தற்போது, இந்தியாவில் 2,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் 2,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், இதுவரை 4,41,45,667 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிகிறது. நேற்று மட்டும், நாடு முழுவதும் 1.51 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசியால் அதிகரிக்கும் மாரடைப்பு ; மக்கள் அச்சம் – என்ன சொல்கிறது அரசு?

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் குணமடையும் விகிதம் தற்போது 98.8 சதவீதமாகவும், தினசரி தொற்று விகிதம் 0.09 சதவீதமாகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,769 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு, நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 220.11 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

உலக அளவில் பரவும் கொரோனா
அதேசமயம், உலகளவில், கொரோனா பாதிப்பு பயமுறுத்துகிறது. கடந்த ஏழு நாட்களில், உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஏழு நாட்களில், 29,50,720 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 9,535ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,34,439 ஆக உள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு

இந்த அறிக்கையின்படி, கடந்த ஏழு நாட்களில் ஜப்பானில் 1,030,572 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் மற்றும் 2,179 பேர் இறந்துள்ளனர். தென் கொரியாவில் 4,54,935 க்கும் மேற்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் மற்றும் 440 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 1,79,145 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் மற்றும் 1,103 பேர் இறந்துள்ளனர். தைவானில் 1,75,730 க்கும் மேற்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் மற்றும் 186 பேர் இறந்துள்ளனர்.

பிரேசிலில் 1,69,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,015 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர, ஹாங்காங்கில் 1,65,014, ஜெர்மனியில் 1,57,928, பிரான்சில் 1,44,401, இத்தாலியில் 62,700 மற்றும் அர்ஜென்டினாவில் 62,193 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த ஏழு நாட்களில், இந்தியாவில் மிகக் குறைவான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 1,550. இந்த காலகட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க | COVID-19: இனி ‘இந்த’ மாநிலத்தில் மாஸ்க் கட்டாயம்! புதிய விதிமுறைகள் அமல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.