டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. நாளை அனைத்து தரப்பினரும் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.