அன்பை வெளிப்படுத்த அஞ்ச வேண்டாம் – கிருத்திகா உதயநிதி பதிவு
உதயநிதி – கிருத்திகா தம்பதியரின் மகன் இன்பநிதி மேற்படிப்பிற்காக லண்டனில் உள்ளார். இந்நிலையில் ஒரு பெண்ணுடன் இன்பநிதி நெருக்கமாக இருக்கும் போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதை வைத்து நிறைய விமர்சனங்களும், டிரோல்களும் அவர் மீது முன் வைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த விவகாரத்தை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக பதிவுட்டுள்ள கிருத்திகா, ‛‛அன்பையும், அதை வெளிப்படுத்தவும் அச்சப்பட வேண்டாம். இயற்கையை அதன் முழு மேன்மையுடன் புரிந்து கொள்ளும் வழிகளில் இதுவும் ஒன்று'' என குறிப்பிட்டுள்ளார்.