புதுடில்லி : அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் 23-ல் நடந்தது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
அதன்பின், ஜூலை 11ல் நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்,- இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை எதிர்த்து பன்னீர் செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என்றும், இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து பன்னீர் செல்வம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்குவந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புவதாக தெரிவித்தனர். விசாரணை இன்றும்தொடர்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement