வியட்நாமில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.
வியட்நாமின் தெற்கு மாநிலமான டோங் தாப் என் இடத்தில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் மாலை, 10 வயது சிறுவன் அங்குள்ள 115 அடி (30 மீற்றர்) ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.
சிறுவனை உயிருடன் மீட்கும் முயற்சியில் அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நவீன இயந்திரங்கள் மூலம் பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
WPA
இந்நிலையில் மீட்பு பணிகள் தோல்வியடைந்தது. புதன்கிழமை இரவு 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டான்.
100 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு, 30 மீட்டர் கான்கிரீட் தூணில் சிக்கிய 10 வயது வியட்நாம் சிறுவன் உயிரிழந்தான்.
தற்போது சிறுவனின் உடலை மீட்டு அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டோங் தாப்பின் துணைத் தலைவரான டோன் டான் புவ், அவர் உயிர்வாழ போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் அவர் இறந்ததாகவும், அவர் பல காயங்களுக்கு ஆளானதாகவும் கூறினார்.
AFP: STR