வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: சீனாவில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியா நிலையான பொருளாதாரத்தை கொண்டுள்ளது என கர்நாடகாவில் பாஜ., தலைவர் நட்டா பேசினார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, டில்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்தார்.
இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சித்ரதுர்காவுக்கு வந்தார். இதையடுத்து தும்கூர் நகரத்தில் கட்சி தொண்டர்கள் நட்டாவுக்கு அமோக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, அங்கு நடந்த நிகழ்ச்சியில் நட்டா பேசியதாவது: கோவிட் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகு, பல சக்திவாய்ந்த நாடுகள் பல்வேறு பிரச்னையில் இருந்து வருகின்றனர்.
சீனாவில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியா நிலையான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. மேலும் பிரிட்டனை விஞ்சி பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பாவும் கூட பொருளாதார சிக்கலை எதிர்கொள்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement