நடிகர் விஜயின் ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரது மனைவி சங்கீதா கலந்துகொள்ளாதையடுத்து, இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக வதந்திகள் தீவிரமாக பரவிவருகிறது.
விவாகரத்து வதந்திகள்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் ‘தளபதி’ விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த தம்பதிக்கு திருமணமாகி 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சில ஊடக அறிக்கைகளின்படி, விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில் அவரும் சங்கீதாவும் விவாகரத்து பெற பரஸ்பரம் முடிவு செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து அவர்களின் விவாகரத்து பற்றிய வதந்திகள் தொடங்கியது.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சங்கீதா கலந்து கொள்ளாததும், ‘மெர்சல்’ பட இயக்குநர் அட்லீ மற்றும் பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் மட்டும் தனியாக கலந்துகொண்டதும் இந்த வதந்திகளுக்கு வலு சேர்த்துள்ளது.
சங்கீதா அமெரிக்காவில்..,
ஆனால், விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து பற்றிய வதந்திகள் அடிப்படையற்றவை. சங்கீதா அமெரிக்காவில் தனது பிள்ளைகளுடன் விடுமுறையில் இருக்கிறார், அதனால்தான் அவரால் எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
விஜய்யும் விரைவில் தனது குடும்பத்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண வாழ்க்கை
விஜய் இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை மணந்தார். அவர்கள் 1996-ல் பிரித்தானியாவில் சந்தித்தனர். அவர்கள் ஆகஸ்ட் 25, 1999 அன்று இந்து மற்றும் கிறிஸ்தவ மரபுகளில் திருமணம் செய்துகொண்டனர்.
அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் – மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா. விஜய்யின் மகன் வேட்டைக்காரன் (2009) திரைப்படத்தில் தனது தந்தையுடன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்தார், மேலும் அவரது மகள் தெறி (2016) திரைப்படத்தில் மகளாக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.
வாரிசு
விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் குடும்ப நாடகமான வாரிசு படத்தின் டிரெய்லர் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தற்போது படத்தின் புரமோஷன் மற்றும் ரிலீஸ் பணிகளில் பிஸியாக உள்ளார் விஜய்.