எதிர்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டம்; பீகார் முதல்வர் தகவல்.!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், பழைய கூட்டணிக் கட்சியான, லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். இந்தக் கூட்டணிக்கு, மகாகத்பந்தன் (Mahagathbandhan) என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இதை அடுத்து, பீகார் மாநில முதலமைச்சராக, நிதிஷ் குமார் பதவியேற்ற நிலையில், துணை முதலமைச்சராக, தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றார். இதற்கிடையே, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, நிதிஷ் குமார் முன்னிலைப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கேற்றவாறு, அவரும் பாஜக எதிர்ப்பு மனநிலைக் கொண்ட கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் வகையில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அடிக்கடி தலைநகர் டெல்லிக்கு பயணமும் மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜகவுடன் கூட்டணியை முறித்த பிறகு பல்வேறு மாநிலக் கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார். தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து பேசினார். அதேபோல் பாஜகவுடன் கூட்டணியை முறித்த பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்தார். மேலும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்தநிலையில், பாஜகவிற்கு எதிரான 2024 லோக்சபா போட்டிக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய போராடும் கவனம் செலுத்தும் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரான பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அடுத்த மாதம் மற்ற தலைவர்களை நாடு தழுவிய அளவில் தொடர்பு கொள்ளத் தொடங்குவார் என தெரிவித்துள்ளார்.

வால்மீகிநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “(சட்டசபை) அமர்வு முடிந்ததும், நான் நிச்சயமாக அதை செய்வேன். பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்றாவது முறையாக பதவியேற்பதற்காக பாஜக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ இம்மாத இறுதியில் முடிவடைய உள்ள நிலையில், மாநில கட்சிகளின் தலைவர்கள், அதாவது எதிர்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.

ராகுல் காந்தி யாத்திரையில் உளவுத்துறை முன்னாள் தலைவர்.!

ராகுல் காந்தி மற்றும் வங்காளத்தின் மம்தா பானர்ஜியுடனான புகைப்படங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் நிதிஷ் குமாரின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அதிக இடங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.