புதுடெல்லி: சிஜி பவர் அண்ட் இன்டஸ்ரியல் சொல்யூசன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் ப்ரமோட்டார் கவுதம் தபார் வங்கியில் ரூ.2435கோடி மோசடி செய்தததாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதர வங்கிகளில் பெற்றிருந்த கடனை திருப்பி செலுத்தாமல் அதே பத்திரங்களுக்கு எதிராக 13வங்கிகளின் கூட்டமைப்பில் இருந்து கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிஜி நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் ப்ரமோட்டார் கவுதம் தபாருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.