செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவித்து விட்டேன்..!! ரூ. 100,000,000,000 நஷ்ட ஈடு கேட்கும் தொழிலாளி!!

மத்திய பிரதேச மாநிலம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால் (35). இவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் போலீசில் புகார் அளித்தார். கடந்த 2018 ஜனவரி 18-ம் தேதி அந்த பெண் அளித்த புகாரில், ‘எனது சகோதரின் வீட்டில் விட்டுவிடுகிறேன் என்று கூறி பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் என்னை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற கந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் கந்து தனது கூட்டாளி பர்னு அம்லியரை அழைத்து என்னை அவரிடம் ஒப்படைத்தார். ஆனால், எனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பர்னு என்னை இந்தூர் அழைத்து சென்றார். அங்கு வைத்து பர்னுவும் தன்னை 6 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்தார்’ என்று புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் 2018 ஜூலை 20-ம் தேதி வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கந்துவை 2020 டிசம்பர் 23-ம் கைது செய்தனர். அவரது கூட்டாளியையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு ரத்லம் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள கந்து மற்றும் அவரது கூட்டாளி பர்னு அம்லியர் மீதான குற்றங்களை அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை. இதனால், 666 நாட்கள் சிறைக்கு பின் கந்து மற்றும் அவரது கூட்டாளி விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தன் மீது போலியாக கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டு 666 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்ததாகவும் தனக்கு மத்தியபிரதேச அரசு 10 ஆயிரத்து 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கந்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவரது மனுவில் கூறியிருப்பதாவது, அவரது இழப்பீட்டு மனு, காவல்துறை தனக்கு எதிராக ‘தவறான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் அவதூறான அறிக்கைகளை’ வழங்கியதாக குற்றம் சாட்டுகிறது மற்றும் குடும்ப வாழ்க்கை இழப்பு மற்றும் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இழப்பு, மற்றும் மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பம் அடைய விடாமல் தடுத்தல் ஆகியவறிற்காக ரூ.10 ஆயிரம் கோடி கேட்டு உள்ளார். இந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் ஜனவரி 10-ம் தேதி விசாரிக்க உள்ளது என அவரது வக்கீல் விஜய் சிங் யாதவ் கூறி உள்ளார்.

இது குறித்து கந்து கூறுகையில், அந்த இரண்டு ஆண்டு சிறைவாசத்தின் போது நான் அனுபவித்த துன்பங்களை என்னால் விவரிக்க முடியாது. என் குடும்பத்தாரால் உள்ளாடைகள் கூட வாங்க முடியவில்லை. சிறையில் உடைகள் இல்லாமல் வெப்பம் மற்றும் குளிர் போன்ற தீவிர காலநிலையை எதிர்கொண்டேன். சிறை தண்டனையில் தோல் நோய் மற்றும் வேறு சில நோய்களை ஏற்படுத்தியது, நான் விடுதலையான பிறகும் என்னை வேதனைப்படுத்தும் நிரந்தர தலைவலி ஏற்பட்டது. ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு ‘நான் இல்லாமல் அவர்கள் என்ன செய்தார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்’ என கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.