ஜப்பானில், 212 கிலோ எடையிலான சூரை மீன், இரண்டேகால் கோடி ரூபாய்க்கு ஏலம்போனது.
ஆண்டுதோறும், புத்தாண்டை முன்னிட்டு தொயோசு மீன் சந்தையில் நடைபெறும் ஏல நிகழ்வில், கடந்தாண்டு, ஒரு கோடியே 5 லட்ச ரூபாய்க்கு சூரை மீனை ஏலம் எடுத்த சுஷி கின்சா என்ற நட்சத்திர விடுதி, இந்தாண்டு அதே எடையிலான மீனை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் சூரை மீன் விலை வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.