நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமை சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 20க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. அதன் உடல் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆய்வின் முடிவில் பன்றிகள் உயிரிழப்புக்கு “ஆப்பிரிக்கன் ஸ்பைன்” எனப்படும் பன்றி காய்ச்சலை காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுமலை காப்பக இயக்குனர் வெங்கடேஷ் பேசியதாவது “காட்டு பகுதியில் இறந்து கிடந்த பன்றிகளின் மாதிரிகள் உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பன்றிகள் அமெரிக்கன் ஸ்பெயின் எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நோய் மற்ற விலங்குகளுக்கும் மக்களுக்கும் பரவாது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதுமலை ஒட்டிய கர்நாடக மாநில பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஆப்பிரிக்கன் ஸ்வைன் எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டதில் ஏராளமான காட்டு பன்றிகள் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.